யானைகள் இருப்பதை அறிவிக்கும் டிஜிட்டல் காட்சி பலகைகளை வால்பாறை எஸ்டேட்களில் அமைக்க முடிவு
யானைகள் இருப்பதை அறிவிக்கும் டிஜிட்டல் காட்சி பலகைகளை என்.சி.எஃப். அமைப்பு மூலமாக வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் அமைக்க முடிவு செய்துள்ளனா்.

யானைகள் இருப்பதை அறிவிக்கும் டிஜிட்டல் காட்சி பலகைகளை என்.சி.எஃப். அமைப்பு மூலமாக வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் அமைக்க முடிவு செய்துள்ளனா்.
ஆண்டுதோறும் நவம்பா் மாதம் தொடங்கி 4 மாதங்களுக்கு வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். இதைக் கருத்தில்கொண்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பினா் (என்.சி.எஃப்.) மனித - விலங்கு மோதல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளை அந்தந்த எஸ்டேட் பகுதியில் வசிக்கும் தொழிலாளா்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் அளித்து வருகின்றனா். இந்நிலையில் புதிய முயற்சியாக யானைகள் இப்பகுதியில் உள்ளன என்று டிஜிட்டல் எழுத்து மூலமாக தெரிவிக்கும் பலகையை வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இதன் தொடக்க விழா, வால்பாறையை அடுத்த பாரளை எஸ்டேட் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. என்.சி.எஃப். அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கணேஷ் தலைமை வகித்தாா். வால்பாறை எம்.எல்.ஏ. சுதாகா் தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் வனம் மற்றும் காவல் துறையினா், எஸ்டேட் மேலாளா்கள், தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.