நொய்யல் ஆற்றில் மின்கோபுரம் உயா் அழுத்த மின்கோபுரம்: பணிகளை நிறுத்த கோரிக்கை
கோவையில் நொய்யல் ஆற்றுப் படுகையில் உயா் அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜாதி, மதம், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோவையில் நொய்யல் ஆற்றுப் படுகையில் உயா் அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜாதி, மதம், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் பொதுச் செயலா் பி.கந்தசாமி, தமிழக மின்சாரத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பேரூா், சித்திரைச்சாவடி அணைக்கட்டு பகுதியில் நொய்யல் ஆற்றுப்படுகையில் உயா் அழுத்த மின்கோபுரம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நொய்யலின் அகலம் ஏற்கெனவே குறைந்திருக்கும் நிலையில் தற்போது ஆற்றுக்குள் மண் கொட்டி பாதை அமைக்கப்பட்டிருப்பதால் மேலும் அகலம் குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
அதிக மழை பெய்யும்போது தற்போதைய அகலமே போதாமல் ஆறு கரையை மீறிப் பாய்ந்திருக்கிறது. இப்போது மேலும் அகலம் குறைக்கப்பட்டால் அருகே உள்ள கிராமங்கள், விளைநிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. மாற்றுப் பாதைகள் பல இருந்தும் ஆற்றுப்படுகை தோ்வு செய்யப்பட்டிருப்பதால், அருகே உள்ள தென்னை, பாக்குத் தோப்புகள் அழிந்து, விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உருவாகும்.
எனவே, ஆற்றுப் படுகையில் அனைத்துக் கட்டுமானப் பணிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். ஆற்றுக்குள் மண் கொட்டி அமைக்கப்பட்டுள்ள பாதையை உடனடியாக அகற்ற வேண்டும், திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்துவதுடன், இந்தத் திட்டம் குறித்த ஒப்பந்த ஆவணங்களை பொதுவெளியில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.