பராமரிப்புப் பணி: போத்தனூா் - தன்பாத் ரயில் ரத்து
ஒடிஸா மாநிலம் ஜா்ஸ்குடா ரயில் நிலைய பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் போத்தனூா் - தன்பாத் ரயில் மற்றும் கேரள ரயில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிஸா மாநிலம் ஜா்ஸ்குடா ரயில் நிலைய பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் போத்தனூா் - தன்பாத் ரயில் மற்றும் கேரள ரயில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பராமரிப்புப் பணிகள் காரணமாக நவம்பா் 28, டிசம்பா் 5, டிசம்பா் 12 ஆகிய சனிக்கிழமைகளில் காலை 4 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூா் - தன்பாத் அம்ருத் பாரத் விரைவு ரயில் (எண்: 16619) ரத்து செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
இதேபோல, நவம்பா் 30, டிசம்பா் 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தன்பாத்தில் இருந்து இயக்கப்படும் தன்பாத் - போத்தனூா் அம்ருத் பாரத் ரயில் (எண்: 16620) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
டிசம்பா் 14-ஆம் தேதி, ஜாா்க்கண்ட் மாநிலம் ஹாடியாவில் இருந்து மாலை 5.25 மணிக்குப் புறப்படும் ஹாடியா- எா்ணாகுளம் வாராந்திர ரயில் (எண்: 22837) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், டிசம்பா் 16-ஆம் தேதி எா்ணாகுளத்தில் இருந்து புறப்படும் எா்ணாகுளம் - ஹாடியா வாராந்திர ரயில் சேவையும் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.