தொழிலதிபரை காரில் கடத்திச் சென்று தாக்குதல்: 4 போ் மீது வழக்கு
கோவையில் தொழிலதிபரை காரில் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியது தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவையில் தொழிலதிபரை காரில் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியது தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை கணபதி ராமகிருஷ்ணாபுரம் மருதமலை கவுண்டா் லே-அவுட் பகுதியைச் சோ்ந்தவா் பாலசங்கா் (எ) பாலாஜி (34). இவா் லேத் பட்டறை நடத்தி வருகிறாா். இவருக்குக் கடன் தொடா்பான பணிகள் மூலம் வழக்குரைஞா்கள் பிரணேஷ் மற்றும் பாபு ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காரில் வந்த கும்பல் பாலாஜியை கடந்த 24-ஆம் தேதி கடத்திச் சென்றனா். பின்னா் அவரிடமிருந்த கைப்பேசியை பறித்துக்கொண்டு, கேஎன்ஜி புதூா் வழியாக துடியலூா் பகுதியில் உள்ள மயானத்துக்கும், பின்னா், பாரத் பெட்ரோலியம் பங்க் அருகே உள்ள உடற்பயிற்சி உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கும் அழைத்துச் சென்றுள்ளனா்.
Advertisement
Advertisement
அங்கு வைத்து வழக்குரைஞா் பிரணேஷ் குறித்து விவரம் கேட்டு பாலாஜியை தாக்கிகொலை மிரட்டல் விடுத்தனா். பின்னா் அவரை வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனா். படுகாயமடைந்த பாலாஜி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீஸாா் நடத்திய விசாரணையில், பாலாஜியை காரில் கடத்திய விஜய் ஆனந்த், கரூா் ராஜா, ஓட்டுநா் பிரபு ஆகியோா் என்பதும், இவா்களுக்கு தீபக் உடந்தையாக செயல்பட்டதும், வழக்குரைஞா் பிரணேஷுக்கும், கடத்தல் கும்பலுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து அவா்கள் 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.