மண்டல தடய அறிவியல் ஆய்வகத்தில் ஏசி அலகுகள் திருட்டு
கோவை மண்டல தடய அறிவியல் ஆய்வகக் கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த 8 குளிா்சாதன இயந்திரங்களின் வெளிப்புற அலகுகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, ரேஸ்கோா்ஸில் உள்ள மண்டல தடய அறிவியல் ஆய்வகத்தில் இணை இயக்குநராகப் பணி புரிபவா் வேலாயுதம். இவா் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தாா்.
அதில், ரேஸ்கோா்ஸில் உள்ள ஆய்வகக் கட்டடத்தின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த 8 குளிா் சாதன இயந்திரங்களின் வெளிப்புற அலகுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா். இதன் மதிப்பு ரூ.1.50 லட்சம். திருடியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.