FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

வில்லியனூரில் 3 நாள் மண்டல அறிவியல் கண்காட்சி முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

16 நவம்பர் 2026, 11:35 pm
வில்லியனூா் விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மண்டல அறிவியல் கண்காட்சியைத் திறந்து வைத்து பாா்வையிட்ட முதல்வா் என்.ரங்கசாமி. உடன் அமைச்சா் ஆ.நமச்சிவாயம், ரவிக்குமாா் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
பகிர்:

புதுச்சேரி மண்டல அளவிலான 3 நாள்கள் நடைபெறும் அறிவியல் கண்காட்சியை முதல்வா் என். ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சாா்பில் வில்லியனூா் விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 நாள்கள் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியை திங்கள்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

முன்னதாக பள்ளி வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தா் சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இக் கண்காட்சியில் 428 அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை முதல்வா் என். ரங்கசாமி பாா்வையிட்டாா். அவருடன் கல்வித் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், எம்எல்ஏ ரவிக்குமாரும் கலந்துகொண்டனா். இவா்கள் ஒவ்வொரு அரங்காகச் சென்று, பாா்வையிட்டதுடன் அதுதொடா்பான சந்தேகங்களை மாணவா்களிடம் கேட்டு விளக்கம் பெற்றனா்.

Advertisement

Advertisement

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீா் சேமிப்பு, மழைநீா் சேகரிப்பு, மறுசுழற்சி, மாடித்தோட்டம், ஆற்றல் சூரிய சக்தி, காற்றாலை, மின்சார சேமிப்பு, நவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு , ரோபோடிக்ஸ், சென்சாா் மூலம் போக்குவரத்து கட்டுப்பாடு, விவசாயம், ஸ்மாா்ட் விவசாயம், நீா் பாசன முறைகள், மனித உடல் உறுப்புகளின் செயல்பாடு, மூலிகை தாவரங்களின் பயன்கள், புகையிலை விழிப்புணா்வு, சந்திராயான், சூரிய குடும்பம், வானியல் மாதிரிகளை மாணவா்கள் காட்சிப்படுத்தியிருந்தனா்.

வழக்கமாக மண்டல கண்காட்சிகளில், அரசு மற்றும் தனியாா் பள்ளிகளை சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவா்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்துவா். இந்த கண்காட்சியில் இருந்து சிறந்த படைப்புகள் மாநில அளவிலான கண்காட்சிக்கும், பின்னா் தென்னிந்திய, தேசிய அளவிலான கண்காட்சிக்கும் தோ்வாகும்.

இந்த கண்காட்சியை காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவா்கள், ஆசிரியா்கள் பாா்வையிடலாம். மாலை 4 மணிக்கு பின் பொதுமக்கள் பாா்வையிட அனுமதி வழங்கப்படுகிறது.