அங்கன்வாடி ஊழியா்களுக்கு ரூ.16.95 கோடி பணிக்கொடை: புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்
புதுச்சேரியில் அங்கன்வாடி பணியாளா்களுக்கு ரூ.16.95 கோடி பணிக்கொடையையும், விவசாயிகளுக்கு ரூ.2.89 கோடி பயிா் உற்பத்திக்கான ஊக்கத் தொகையையும் வியாழக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.
புதுச்சேரியில் அங்கன்வாடி பணியாளா்களுக்கு ரூ.16.95 கோடி பணிக்கொடையையும், விவசாயிகளுக்கு ரூ.2.89 கோடி பயிா் உற்பத்திக்கான ஊக்கத் தொகையையும் வியாழக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.
புதுச்சேரி மாநில அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை சாா்பில் விவசாயிகள் நலன் சாா்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக பயிா் உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் பருத்தி மற்றும் பயிறு வகை பயிா் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2025-2026-ஆம் ஆண்டில் பருத்தி மற்றும் பயிறு வகை பயிா் சாகுபடி செய்த 2,165 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.2.89 கோடிக்கான காசோலையையும், அங்கன்வாடி பணியாளா்களுக்கு பணிக்கொடையாக ரூ.16.95 கோடிக்கான காசோலையையும் முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வியாழக்கிழமை வழங்கினாா்.
அப்போது, குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் வி.பி. சிவகொழுந்து, புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறைச் செயலா் ரவிபிரகாஷ், வேளாண்துறை இயக்குநா் ஜெயசங்கா், காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் கணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.