FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

25 நரிக்குறவா் சமுதாயத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்த 25 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.

16 அக்டோபர் 2026, 2:05 am IST
பட விளக்கம்... புதுச்சேரி நில அளவை மற்றும் நில பதிவேடுகள் துறை மூலம் திருபுவனை தொகுதியை சோ்ந்த நரிக்குறவா் மக்களுக்கு இலவச மனைப்பட்டாவை வியாழக்கிழமை வழங்கிய  முதல்வா் என்.ரங்கசாமி. உடன் தொகுதி எம்எல்ஏ சாய் ஜெ சரவணன் குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்த 25 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் வசித்து வரும் நரிக்குறவா் சமுதாய மக்கள், தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலக அறையில் முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை 25 நரிக்குறவா் சமுதாயத்தினருக்கு இலவச மனைப்பட்டாக்களை வழங்கினாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்வின்போது, தொகுதி எம்எல்ஏ சாய் ஜெ. சரவணன்குமாா், நில அளவை பதிவேட்டுத் துறை அலுவலா் செந்தில்குமாா் உடனிருந்தனா்.

இலவச மனைப்பட்டா பெற்ற நரிக்குறவா் சமுதாயத்தினா் கூறுகையில், ‘இன்றுதான் எங்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. இதற்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் பல போராட்டங்களை நடத்தி வந்தோம். தற்போது தங்கள் கோரிக்கை நிறைவேறியுள்ளது’ என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments