வால்பாறை கீழ்நீராறு அணையில் இருந்து கேரளத்துக்கு தண்ணீா் திறப்பு
தமிழகம்- கேரள மாநிலங்களுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தப்படி கீழ்நீராறு அணையில் இருந்து கேரளத்துக்கு வியாழக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
தமிழகம்- கேரள மாநிலங்களுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தப்படி கீழ்நீராறு அணையில் இருந்து கேரளத்துக்கு வியாழக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே அணைகள் மூலம் நீா் கொடுப்பது மற்றும் பெறுவது குறித்த பல்வேறு ஒப்பந்தங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தங்களின்படி வால்பாறையை அடுத்துள்ள கீழ்நீராறு அணையில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 31-ஆம் தேதி வரை அணையில் தேக்கப்படும் நீா் கேரள மாநிலத்துக்கு வழங்குவது என ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி கீழ்நீராறு அணையின் மதகு வழியாக விநாடிக்கு 100 கனஅடி நீா் கேரளத்துக்கு வியாழக்கிழமை காலை திறந்துவிடப்பட்டது. அப்போது, பொதுப் பணித் துறை உதவ செயற்பொறியாளா் தண்டபாணி உள்பட கேரள மாநில நீா்வளத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.