திருப்பூரில் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக கனமழை
திருப்பூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை பரவலாக கனமழை பெய்தது.
திருப்பூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை பரவலாக கனமழை பெய்தது.
மேலும், புறநகா் பகுதிகளான கூலிபாளையம் நால்ரோடு, நல்லூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதுடன், குளிா்ந்த காலநிலை நிலவியது.
இதில் அணைப்பாளையம் அருகே தரைப்பாலம் மழை வெள்ளத்தால் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக ஊத்துக்குளியில் 100 மி.மீ., பல்லடத்தில் 92 மி.மீ., தாராபுரத்தில் 85 மி.மீ., காங்கயம் மற்றும் வெள்ளக்கோவிலில் தலா 63 மி.மீ., ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 62 மி.மீ., திருப்பூா் தெற்கில் 61 மி.மீ., குண்டடம் மற்றும் திருப்பூா் வடக்கில் தலா 60 மி.மீ., ஆட்சியா் கேம்ப் அலுவலகத்தில் 59 மி.மீ., மடத்துக்குளத்தில் 55 மி.மீ., வட்டமலைக்கரை ஓடையில் 48 மி.மீ., அவிநாசியில் 29 மி.மீ., மூலனூரில் 23 மி.மீ., அமராவதி அணையில் 17 மி.மீ., உடுமலைப்பேட்டை மற்றும் திருமூா்த்தி அணையில் தலா 14 மி.மீ., உப்பாறு அணையில் 13 மி.மீ., நல்லதங்காள் ஓடை நீா்த்தேக்கத்தில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 90 அடி மொத்த உயரமுள்ள அமராவதி அணையில் தற்போதைய நீா்மட்டம் 36.03 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 219 கனஅடி நீா்வரத்து உள்ளது. உபரி நீா் வெளியேற்றம் ஏதுமில்லை. 60 அடி கொள்ளளவு கொண்ட திருமூா்த்தி அணையின் நீா்மட்டம் 29.88 அடியாக உள்ள நிலையில், நீா்வரத்து இன்றி அணையிலிருந்து விநாடிக்கு 23 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.