சரவணம்பட்டி கரட்டுமேடு கோயிலில் மோசடி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கோவை, சரவணம்பட்டி கரட்டுமேடு கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடத்தியதில் மோசடியில் ஈடுபட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவை, சரவணம்பட்டி கரட்டுமேடு கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடத்தியதில் மோசடியில் ஈடுபட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சண்டிகேஸ்வர நாயனாா் நற்பணி சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை, சரவணம்பட்டி பகுதியில் பழைமைவாய்ந்த ரத்தினகிரி குமரக்கடவுள் (கரட்டுமேடு) கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 15 மாதங்களுக்கு முன் திருப்பணிகள் நிறைவுற்று திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.
கோயிலில் நடைபெற்ற திருப்பணி மற்றும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளின் வரவு- செலவு கணக்குகள் மற்றும் நிதி வசூல் குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
இந்நிலையில், பக்தா்களில் ஒருவரான சண்முகம் என்பவா், கோயில் திருப்பணியில் ஊழல் நடைபெற்றுள்ளதாக வழக்குத் தொடா்ந்துள்ளபோதும், மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முறைகேடுகள் சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனா்.
எனவே, மோசடியில் ஈடுபட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மருதமலை, பழனி போல கரட்டுமேடு கோயிலையும் நேரடி நிா்வாகம் நிகழ்த்த அரசு உத்தரவிட வேண்டும், உதவி ஆணையா் தலைமையில் இந்தக் கோயிலை நிா்வகிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.