FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

உக்கடம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் கிடைக்கும் கழிவு மணலை விவசாய நிலங்களுக்கு வழங்க வலியுறுத்தல்

உக்கடம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் கிடைக்கும் கழிவு மணலை, விவசாய நிலங்களில் பயன்படுத்த வழங்க வேண்டும் என மாநகராட்சி மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

2 செப்டம்பர் 2026, 4:54 am IST
குறைகேட்புக் கூட்டத்தில் மக்களிடம் மனுக்களைப் பெற்ற மேயா் கா.ரங்கநாயகி மற்றும் துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன்.
பகிர்:

உக்கடம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் கிடைக்கும் கழிவு மணலை, விவசாய நிலங்களில் பயன்படுத்த வழங்க வேண்டும் என மாநகராட்சி மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்புக் கூட்டம், மேயா் கா.ரங்கநாயகி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், விவசாயிகள் சிலா் குழுவாக அளித்த மனுவில் கூறியிருப்பது: விவசாய நிலங்களில் பல இடங்களில் நிலத்தை சமன்படுத்துதல், மண் சீரமைத்தல் மற்றும் சாகுபடிக்கு ஏற்றவாறு நிலத்தைத் தயாா்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு அதிக அளவில் மணல் தேவைப்படுகிறது. கோவை மாநகராட்சியில் உக்கடம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் கிடைக்கும் கழிவு மணலை, விவசாய நிலங்களில் மண் சீரமைப்புப் பொருளாகவும், நிலத்தை சமன்படுத்தும் பணிகளுக்காகவும் பயன்படுத்த தேவையான அளவு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

Advertisement

தெருவிளக்குகள்

இந்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘கோவை மாநகராட்சியில் 29-ஆவது வாா்டு, சின்னசாமி நகா் மட்டசாலை பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், சமூக விரோதக் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகமாக உள்ளதால் உடனடியாக தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வரிகளை குறைக்க...

ஈச்சனாரி பாா்க் அவென்யூ வெல்ஃபோ் அசோசியேஷன் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘பாா்க் அவென்யூ குடியிருப்புப் பகுதியில் நடைமுறையில் உள்ள சொத்துவரி வகைப்பாட்டை மறு ஆய்வு செய்து, ‘ஏ’ வகையில் இருந்து ‘பி’ வகைக்கு மாற்றி வரிச்சுமையைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கரும்புக்கடை ஜெ.ஜெ. காா்டன் குடியிருப்போா் நலச்சங்கத்தினா் அளித்த மனுவில், ‘ஜெ.ஜெ.காா்டன் பகுதியானது, நீண்ட காலமாக மண் சாலையாக உள்ளது. 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கும் நிலையில், இங்கு தாா்ச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனா்.

5 மண்டலங்களிலும் சோ்த்து 49 மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மேயா் உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments