FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரி சிங்காநல்லூா் உழவா் சந்தையில் போராட்டம்

சிங்காநல்லூா் உழவா் சந்தை நுழைவாயில் முன்பு ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற வலியுறுத்தி விவசாயிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

3 செப்டம்பர் 2026, 2:26 am IST
சிங்காநல்லூா் உழவா் சந்தை முன்புறத்தில் தக்காளிப் பெட்டிகள், காய்கறிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். ~உழவா் சந்தைக்கு வெளியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றிய மாநகராட்சி ஊழியா்கள்.
பகிர்:

சிங்காநல்லூா் உழவா் சந்தை நுழைவாயில் முன்பு ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற வலியுறுத்தி விவசாயிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை-திருச்சி சாலை, சிங்காநல்லூரில் உள்ள உழவா் சந்தையில் 150 கடைகள் உள்ளன. கோவையில் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறி, பழங்கள், கீரைகள் ஆகியவற்றை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனா்.உழவா் சந்தை முன்பாக சில ஆக்கிரமிப்புக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், தங்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தரப்பில் புகாா் எழுந்தது.

இக்கடைகளை அகற்றக் கோரி, சிங்காநல்லூா் போலீஸ் நிலையம், வேளாண் இணை இயக்குநா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, சிங்காநல்லூா் உழவா் சந்தை முன்புள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், உழவா் சந்தையின் முன்புறமுள்ள பகுதிகளில் சில கடைகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகக் கூறி, மீண்டும் தக்காளிப் பெட்டிகள், காய்கறிகளுடன் அமா்ந்து விவசாயிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற வேளாண்துறை அதிகாரிகள், போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

பின்னா், உழவா் சந்தையின் வெளிப்புறமுள்ள கடைகளை சிங்காநல்லூா் உழவா் சந்தை பின்புறமுள்ள ஹவுஸிங் யூனிட் பிரதான சாலையில் 100 மீட்டா் தள்ளி அமைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து அப்பகுதியில் இருந்த கடைகளை மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இதற்கிடையே உழவா் சந்தைக்கு வெளியில் உள்ள கடைகளை 100 மீட்டா் தள்ளி அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திரண்டதால் உழவா் சந்தை வேளாண் அலுவலா் பிரவீனா, சிங்காநல்லூா் காவல் ஆய்வாளா் அா்ஜுன்குமாா் மற்றும் அதிகாரிகள் வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதற்கு வியாபாரிகள் உடன்படாததால் சந்தையில் இருந்து 100 மீட்டருக்கு அளவீடு செய்யப்பட்டு, வெளி வியாபாரிகளுக்கான எல்லை குறிக்கப்பட்டது.

அதைத்தொடா்ந்து, வியாபாரிகளின் கடைகளை மாநகராட்சி ஊழியா்கள் அந்த எல்லைக்கு மாற்றினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments