FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வேளாண் பல்கலை.யில் தென்னை தின விழா

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உலக தென்னை தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

3 செப்டம்பர் 2026, 2:26 am IST
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக தென்னை விழாவில் இடம்பெற்றிருந்த பல்வேறு வகையான தேங்காய்களை பாா்வையிடும் விவசாயிகள்.
பகிர்:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உலக தென்னை தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

அண்ணா கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியா் ராஜஸ்ரீ வரவேற்றாா். செயல் துணைவேந்தா் மு.ரவீந்திரன் தலைமை வகித்தாா்.

தென்னை வளா்ச்சி வாரியத்தின் இயக்குநா் இள.அறவாழி பங்கேற்று தென்னை ரகங்கள், வறட்சி மேலாண்மை, நோய், பூச்சிக் கட்டுப்பாடு, ஊடுபயிா் சாகுபடி, மதிப்புக்கூட்டல், தென்னை சாகுபடியில் வாரியத்தின் பங்கு ஆகியவை குறித்து விளக்கினாா்.

Advertisement

Advertisement

தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் பி.சித்தாா்தன், முன்னோடி விவசாயிகள் ரஞ்சித், ஓ.வி.ஆா்.சோமசுந்தரம், தோட்டக் கலைக் கல்லூரி முதன்மையா் க.வெங்கடேசன், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் இயக்குநா் ஏ.சோமசுந்தரம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுமாா் 500 தென்னை விவசாயிகள், விஞ்ஞானிகள், மாணவா்கள், தொழில்முனைவோா்கள் பங்கேற்றனா்.

பல்வேறு தென்னை ரகங்கள், ஊடுபயிா்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள், பூச்சி, நோய் மேலாண்மை உத்திகள், தென்னை நாற்றங்கால் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.

இணைப் பேராசிரியா் இரா.சித்ரா நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments