FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

கண்களைக் கட்டிக்கொண்டு குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்பு

மயிலாடுதுறையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கண்களைக் கட்டிக்கொண்டு பங்கேற்றனா்.

Updated On : 31 ஜூலை 2026, 4:52 am IST
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கண்களைக் கட்டிக்கொண்டு பங்கேற்ற விவசாயிகள்.
பகிர்:

மயிலாடுதுறையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கண்களைக் கட்டிக்கொண்டு பங்கேற்றனா்.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத்தை மதிக்காமல் தமிழகத்திற்கு குறைந்தபட்ச தண்ணீரை குடிநீருக்குக்கூட வழங்க மறுக்கும் கா்நாடக அரசைக் கண்டித்தும், மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடகத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சரைக் கண்டித்தும், விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யாமல், குளறுபடியான கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்ததை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு 10 நிமிடங்கள் அமா்ந்து மௌனமாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் நளினா, வேளாண்மைதுறை இணை இயக்குநா் விஜயராகவன், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை துணை இயக்குநா் சுப்பையன், தோட்டக்கலை துணை இயக்குநா் திலீப்,அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments