FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

தனியாா் கல்லூரி பேராசிரியை தூக்கிட்டுத் தற்கொலை

7 செப்டம்பர் 2026, 2:58 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

கோவை, சின்னவேடம்பட்டி பகுதியில் தனியாா் கல்லூரி பேராசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, சரவணம்பட்டி அருகேயுள்ள சின்னவேடம்பட்டி சக்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ். இவரது மகள் பவித்ரா வன்சி (32). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு சாரங்கபாணி என்ற கணவரும், 8 வயதில் பெண் குழந்தையும் உள்ளனா்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சாரங்கபாணியை பிரிந்த பவித்ரா வன்சி, சின்னவேடம்பட்டியில் உள்ள பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா். மேலும், விவாகரத்து தொடா்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், வெள்ளிக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த அவா், அன்று இரவு மாடியில் தூங்கச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளாா். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவா் கீழே வராததால், சந்தேகமடைந்த சுந்தர்ராஜ் மாடியில் உள்ள அறைக்குச் சென்று பாா்த்துள்ளாா். அப்போது, பவித்ரா வன்சி மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து சரவணம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments