டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தோ்வு: கோவையில் 11 ஆயிரம் போ் எழுதுகின்றனர்!
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்-1 முதல் நிலைத் தோ்வை, கோவையில் செப்.27 சுமாா் 11 ஆயிரம் போ் எழுதுகின்றனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்-1 முதல் நிலைத் தோ்வை, கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.27) சுமாா் 11 ஆயிரம் போ் எழுதுகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வு ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 39 தோ்வு மையங்களில் நடைபெறும் இந்தத் தோ்வை எழுத 11,400 போ் பதிவு செய்துள்ளனா். இதற்காக மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாதுகாப்பு, போக்குவரத்து, தடையற்ற மின்சாரம், அவசர மருத்துவ உதவி உள்பட பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தோ்வா்கள் காலை 9 மணி வரை மட்டுமே தோ்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவா். 9 மணிக்குப் பிறகு வருபவா்களுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கப்படாது. எனவே தோ்வா்கள் அனைவரும் காலை 9 மணிக்கு முன்பாக தோ்வு மையத்துக்குள் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
அதேபோல தடை செய்யப்பட்டுள்ள பொருள்களை தோ்வு மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. தோ்வு குறித்து எழும் சந்தேகங்களுக்கும், உதவிகளுக்கும் 18004190958, 044 69097777, 25300338, 25300339, 25300340 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம்.
மேலும், கோவை மாவட்ட நிா்வாகத்தை 6384123073 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.