ஈமு கோழி மோசடி: மார்ச் 15-க்கு பிறகு புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது: பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் அறிவிப்பு
ஈமு கோழி மோசடி தொடர்பான புகார்கள் மார்ச் 15-ஆம் தேதிக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும், அதன்பிறகு புகார் செய்பவர்கள் கோவையில் உள்ள டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தை நாடவேண்டும் என்றும் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் அறிவித்துள்ளனர்.
ஈமு கோழி மோசடி தொடர்பான புகார்கள் மார்ச் 15-ஆம் தேதிக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும், அதன்பிறகு புகார் செய்பவர்கள் கோவையில் உள்ள டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தை நாடவேண்டும் என்றும் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து இக்குற்றப் பிரிவின் ஈரோடு அலுவலகம் சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
ஈரோடு மாவட்டத்தில், முதலீட்டாளர்களை ஏமாற்றியது தொடர்பாக ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவில் சுசி ஈமு பார்ம்ஸ், குயின் ஈமு பார்ம்ஸ், டி.வி.எஸ். ஈமு பார்ம்ஸ் என 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இவ்வழக்கு, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. முதலீட்டாளர்களுக்கு, அவர்களது முதலீட்டு தொகையை வழங்கும் வகையில், நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த நிறுவனங்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பிட்ட பொருள்கள் ஏலம் மூலம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விற்பனை செய்து, முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி நிறுவனங்களில் முதலீடு செய்த முதலீட்டாளர்களில் எவரேனும் புகார் வழங்காமல் இருந்தால், மார்ச் 15-ஆம் தேதிக்குள் புகார் வழங்க வேண்டும். தொடர்ந்து பெறப்படும் புகார்களின் அடிப்படையில், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மேலும் தாமதப்படுகிறது.
எனவே, மார்ச் 15-க்குப் பின் வரும் புகார்தாரர்கள், கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிக் கொள்ள வேண்டும். கூடுதல் தகவல் பெற 0424- 2256700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.