தமிழகத்தில் உயர் கல்வி பயில்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்
தமிழக முதல்வர் கல்வித் துறைக்கு தந்த முக்கியத்துவத்தின் பயனாக, உயர் கல்வி பயில்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் கல்வித் துறைக்கு தந்த முக்கியத்துவத்தின் பயனாக, உயர் கல்வி பயில்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தெரிவித்தார்.
பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ. 48 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் செல்லப்பன், பள்ளிக் கட்டடக் குழுத் தலைவர் டி.கே.நல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் வரவேற்றார். விழாவில், புதிய கலையரங்கத்தை திறந்து வைத்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பேசுகையில்,
Advertisement
Advertisement
"முதல்வர் ஜெயலலிதா கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் தந்து வருகிறார்.
கடந்த 5 ஆண்டுகளில் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதன் காரணமாக உயர் கல்வி செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது' என்றார்.புதிய கலையரங்கம் அமைக்க, அரசு சார்பில் ரூ. 22.50 லட்சமும், ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் ரூ.15.50 லட்சமும், கோவை ஜெ.ஜெ.மில்ஸ் ரூ. 10 லட்சமும் வழங்கியுள்ளனர்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஷ், ஈரோடு சக்தி மசாலா நிறுவன இயக்குநர் பி.சி.துரைசாமி, இயக்குநர் சாந்தி துரைசாமி, கோவை, ஜெ.ஜெ.மில்ஸ் நிர்வாக இயக்குநர் ஜெயந்த், பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.பெரியசாமி, துணைத் தலைவர் விஜயன், வெட்டையன்கிணறு கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் திங்களூர் சு.கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் எம்.ராமசாமி நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.