FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

சொத்து வரி  உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சி நிர்வாகங்களில் சொத்து வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து ஈரோடு, சூரம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 7:16 am IST
பகிர்:

உள்ளாட்சி நிர்வாகங்களில் சொத்து வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து ஈரோடு, சூரம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்துக்கு, ஈரோடு நகரச் செயலர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி, வீட்டு வரியை 50, 100 சதவீதம் உயர்த்தப்பட்டதைத் திரும்பப் பெற வேண்டும். 
பாதாள சாக்கடை வரி, குப்பை வரி, நூலக வரி என மக்களிடம் பணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும்.
ஈரோடு மாநகர மக்களுக்கு சுகாதாரமான குடிநீர், தரமான தார் சாலை, வடிகால் வசதி, சுகாதார வசதிகளை முழுமையாக செய்து கொடுக்க வேண்டும். பெரு நிறுவனங்களுக்கு வழங்கும் வரி சலுகைகளை சாதாரண மக்களின் மீது திணிக்கக் கூடாது என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments