FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கோபி பகுதியில் ஆகஸ்ட் 8 இல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் 

கோபி பகுதியில் உள்ள மின் உபயோகிப்பாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. 

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

கோபி பகுதியில் உள்ள மின் உபயோகிப்பாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. 
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் கோபி மின் பகிர்மான வட்டம் சார்பில்,  கோபி பகுதியில் உள்ள மின் உபயோகிப்பாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம் கோபி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கோபி மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர், மின்நுகர்வோரின் குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்கவுள்ளதால் கோபி கோட்ட பகுதிக்குள்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களது மின்சாரம் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என கோபி மின் பகிர்மான வட்டம் கோபி அலுவலகத்தில் இருந்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments