FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கனமழை: விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (அக். 23) விடுமுறை

விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறித்து...

- பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு மற்றும் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. சென்னையில் வியாழக்கிழமை இரவு தொடங்கிய மழை, வெள்ளிக்கிழமை காலை வரையில் பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், இந்த 3 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இதேபோல், மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மத்திய, மாநில அரசுகளுக்குச் சொந்தமான சுமாா் 3,500 ஏக்கா் பரப்பளவிலான உப்பளங்களில் மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், மரக்காணத்தில் உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளா்கள் வேலைவாய்ப்பை இழந்து வீட்டில் முடங்கியுள்ளனா்.

summary

Heavy rain: Holiday for schools in Villupuram, Tiruvannamalai and Kallakurichi districts today (Oct. 23)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments