FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஈரோடு புத்தகத் திருவிழா அரங்குகள் இன்று  வழக்கம்போல் செயல்படும்

ஈரோடு புத்தகத் திருவிழா அரங்குகள் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் வழக்கம்போல் செயல்படும் என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளார். 

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

ஈரோடு புத்தகத் திருவிழா அரங்குகள் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் வழக்கம்போல் செயல்படும் என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈரோடு புத்தகத் திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன. மேலும், புத்தக அரங்குகளும் மூடப்பட்டன. இந்நிலையில், வியாழக்கிழமை காலை (ஆகஸ்ட் 9) 11 மணி முதல் புத்தகத் திருவிழா அரங்கம் வழக்கம்போல் திறக்கப்படும். இதைத் தொடர்ந்து மாலையில் நடைபெறும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சியில் இலக்கியச் சொற்பொழிவாளர் வாசுகி மனோகரன் சிறப்புரையாற்றுகிறார்.
அதேவேளையில், விடுமுறை விடப்பட்ட நாளை ஈடுகட்டும் வகையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு புத்தகத் திருவிழாவை நீட்டிப்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த அறிவிப்பானது வியாழக்கிழமை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments