FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஈரோடு மாவட்டத்தில் திமுகவினர் மெளன அஞ்சலி, ஊர்வலம்

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் மெளன அஞ்சலி ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.   

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் மெளன அஞ்சலி ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.   
திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, பரவலாக பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, கடைகளும் அடைக்கப்பட்டன. இந்நிலையில், இறுதிச் சடங்குகள் புதன்கிழமை நடைபெற்றதால் இரண்டாவது நாளாக அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. தனியார், அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. விசைத்தறி, கைத்தறிக் கூடங்களும் இயங்கவில்லை. திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 
இதனால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள் ஈரோடு கடைவீதி, பேருந்து நிலையம் உள்பட அனைத்தும் வெறிச்சோடின. பவானியில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான பகுதிகளில் திமுக தலைவர் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர், கருணாநிதியின் புகழ்பாடும் பாடல்களைத் தொடர்ந்து ஒலிபரப்பினர். 
மேலும், மாலையில் நகரின் முக்கிய வீதிகளில் அனைத்துக் கட்சியினர் இணைந்து மெளன அஞ்சலி ஊர்வலமும் நடத்தினர். பவானி, அம்மாபேட்டை, அந்தியூர் நகர, ஊராட்சிப் பகுதிகளிலும் ஊர்வலம் 
நடைபெற்றது.
கொடுமுடியில்...
திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு கொடுமுடி திமுக கட்சி அலுவலகம் முன்பு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கொடுமுடி புதிய பேருந்து நிலையத்துக்கு மௌன ஊர்வலமாகச் சென்று அங்கு கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, ரயில் நிலையம், கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் உள்ளிட்ட முக்கிய வழிகளில் சென்று திமுக கட்சி அலுவலகத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது.
அதேபோல, கொடுமுடி அருகே உள்ள நகப்பாளையம், அருந்ததியர் காலனியில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சமூக ஆர்வலர் மா.ஆறுமுகம், திமுக கட்சி நிர்வாகிகள் அ.குப்பன், பொதுமக்கள் உள்ளிட்டோர் மௌன அஞ்சலி செலுத்தினர்.
சத்தியமங்கலத்தில்...
சத்தியமங்கலம் திமுக சார்பில் நடைபெற்ற மௌன ஊர்வலமானது, எஸ்.ஆர்.டி. கார்னரில் தொடங்கி  ரங்கசமுத்திரம் வழியாகப் பேருந்து நிலையம் சென்றடைந்தது. இந்த  ஊர்வலத்தில் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர். கருணாநிதியின் மறைவையொட்டி, சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளான அரியப்பம்பாளையம், சிக்கரசம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments