FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மென்பொருள் துறையில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது: அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா

மென்பொருள் துறையில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது என அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கூறினார்.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

மென்பொருள் துறையில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது என அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கூறினார்.
சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் பொறியியல் கல்லூரியில் 18 ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்லூரித் தலைவர் எஸ்.வி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா பேசியதாவது: 
மென்பொருள் துறையில் இந்தியா சிறந்த நாடாகத் திகழ்கிறது. அதேசமயம் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா பல்வேறு துறைகளில் பின்தங்கியுள்ளது. பல்வேறு திறமைகளை கொண்டுள்ள நாடு என்பதால் தொழில்நுட்பத்தில் மாணவர்கள் புதுமைகள் செய்யவேண்டும்.  மருத்துவம், தொலைத்தொடர்பு, சென்சார் போன்ற துறைகளில் உள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டும். காற்று, நீர், கழிவு மேலாண்மையில்  தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்களது திறமையை வெளிக்கொண்டு வந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments