ரூ. 1.30 கோடிக்கு கொப்பரை ஏலம்
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1 கோடியே 30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1 கோடியே 30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை அதன் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் 2,714 மூட்டைகளில்1,30,000 கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.
இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 103.35 க்கும், அதிகபட்சமாக ரூ. 105.65 க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 36.95 க்கும், அதிகபட்சமாக ரூ. 103.10 க்கும் விற்பனையானது.
மொத்தம் ரூ. 1 கோடியே 30 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.