வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் திருட்டு
பெருந்துறை அருகே ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பெருந்துறை அருகே ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பெருந்துறையை அடுத்த சுள்ளிபாளையம், சக்தி நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (45). பெருந்துறையில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர், வழக்கம்போல் அலுவலகத்துக்கு சனிக்கிழமை சென்றுள்ளார். இவரது மனைவியும் வெளியே சென்றுள்ளார். இருவரும் இரவில் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்து 5 பவுன் நகை திருட்டுப்போனது தெரியவந்தது.
இதுகுறித்து, பெருந்துறை காவல் நிலையத்தில் வெங்கடாசலம் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார். பெருந்துறை காவல் உதவி ஆய்வாளர் மணிவண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.