FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னிமலை ஒன்றியத்தில் ரூ. 11.88 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகள்

சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 11,88,000 மதிப்பீட்டில் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. 

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 11,88,000 மதிப்பீட்டில் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. 
விழாவில், சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பங்கேற்று வளர்ச்சித் திட்டப் பணிகளை பூமிபூஜை செய்து தொடக்கி வைத்தார். 
விழாவில், பணியம்பள்ளி ஊராட்சி, முத்தராண்டிபாளையத்தில் ரூ. 3.28 லட்சம் மதிப்பில் புதியதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கவும், வாய்ப்பாடி ஊராட்சி, பெரியகாட்டுப்பாளையத்தில் ரூ. 2.60 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கவும், வரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர், மிதிவண்டி நிறுத்தம், தரைப்பாலம், கழிவறை கட்டவும் பூமிபூஜை நடைபெற்றது. 
இதில், சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா, பெருந்துறை ஒன்றியச் செயலாளர் விஜயன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.பெரியசாமி, வேளாண் கூட்டுறவு விற்பனைச் சங்க துணைத் தலைவர் டி.டி.ஜெகதீஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments