உலக அளவிலான இறகுப்பந்து போட்டி: தாமரை மெட்ரிக். பள்ளி மாணவர் தேர்வு
கொடுமுடியை அடுத்த தாமரைப்பாளையம் தாமரை மெட்ரிக். பள்ளி மாணவர், உலக அளவிலான இறகுப்பந்து போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கொடுமுடியை அடுத்த தாமரைப்பாளையம் தாமரை மெட்ரிக். பள்ளி மாணவர், உலக அளவிலான இறகுப்பந்து போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் நவம்பர் 30 ஆம் தேதி முதல் நடைபெற்ற மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், தாமரை மெட்ரிக் பள்ளி மாணவர் எஸ்.ஈஸ்வர் பங்கேற்று விளையாடினர்.
இப்போட்டியில், ஈஸ்வர் உள்ளிட்ட முதல் 8 இடங்களைப் பிடித்த மாணவர்கள் அகில இந்திய அளவிலான இறகுப்பந்து போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
பெங்களூரில் நடைபெற்ற இந்திய அளவிலான போட்டியில், மாணவர் எஸ்.ஈஸ்வர் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, உலக அளவிலான இறகுப்பந்து போட்டிக்கு இந்திய அணியின் சார்பில் விளையாட ஈஸ்வர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக அளவிலான இறகுப்பந்து போட்டி டிசம்பர் 22 முதல் 26 ஆம் தேதி வரை இந்தோனேஸியாவில் நடைபெறவுள்ளது.
வெற்றி பெற்ற மாணவர் ஈஸ்வரை, பள்ளித் தாளாளர் ராஜா, செயலாளர் ஆனந்த், உடற்கல்வி இயக்குநர் சுரேஷ்குமார், பள்ளி முதல்வர் அசோக், பெற்றோர், மாணவர்கள் பாராட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.