FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கோபியில் கொசுப் புழு ஒழிப்பு களப்பணி

கோபியில் கொசுப் புழு ஒழிப்பு களப் பணியின்போது, சுகாதாரம் காக்கும் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி பராட்டி ஊக்குவிக்கும் முயற்சியை கோபி நகராட்சி மேற்கொண்டுள்ளது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

கோபியில் கொசுப் புழு ஒழிப்பு களப் பணியின்போது, சுகாதாரம் காக்கும் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி பராட்டி ஊக்குவிக்கும் முயற்சியை கோபி நகராட்சி மேற்கொண்டுள்ளது.
கோபி நகராட்சியில் 30 வார்டுகளில் வீடு வாரியாக கொசுப் புழு ஒழிப்புப் பணிக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். களப் பணியின்போது கொசுப் புழு இல்லாத வீடுகளில் கோபி நகராட்சி சார்பில் ஸ்டிக்கர் ஒட்டி பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதில், இந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் நகராட்சியின் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என அச்சடித்துள்ளனர்.
கோபி நகராட்சியில் உள்ள 18 ஆயிரம் வீடுகளில் கொசுப் புழு இல்லாத வீடுகளாக 15 ஆயிரம் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் கொசுப் புழு இல்லாத நகராட்சியாக கோபிசெட்டிபாளையம் திகழ வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments