தங்கப் பத்திரம் விற்பனை திட்டம்: தலைமை அஞ்சலகங்களில் டிசம்பர் 24 இல் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் தங்கப் பத்திரத்துக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 24 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் தலைமை
மத்திய அரசின் தங்கப் பத்திரத்துக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 24 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் தலைமை தபால் நிலையங்களில் பெற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேக் ரகுநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக தங்கப் பத்திர விற்பனைத் திட்டம் அறிவித்துள்ளது. இந்தப் பத்திரத்துக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 24 முதல் 28 ஆம் தேதி வரை அனைத்து தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி ஆகிய தலைமை தபால் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் இப்பத்திரங்கள் பெற விரும்புவோர் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பேன் கார்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு நபர் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரையிலான தங்கப் பத்திரத்தை வாங்கிக் கொள்ளலாம். வட்டி விகிதம் பத்திரத்தின் மதிப்புக்கு 2.50 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்பத்திரத்தின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும். 5 ஆண்டுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் திட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.