FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திமுக நிர்வாகிகள் ஆலோசனை

மக்களவை பொதுத் தேர்தலையொட்டி, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

மக்களவை பொதுத் தேர்தலையொட்டி, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஈரோடு, மணல்மேட்டில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்ற கிழக்கு, மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட  கொல்லம்பாளையம் பகுதிக்கான நிர்வாகிகள், வாக்குச் சாவடிக் குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராமசந்திரன், மூத்த வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று மக்களவைத் தேர்தலில் திமுக அதிக வாக்குளைப் பெறும் வழிமுறைகள், களப் பணிகள் குறித்து  ஆலோசனை தெரிவித்தனர்.
இதில், மாநில நிர்வாகிகள் சந்திரகுமார், சச்சிதானந்தம், மாவட்ட பொருளாளர் பழனிசாமி, துணைச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments