மகுடேஸ்வரர் கோயிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஒவ்வோர் வாரமும் செவ்வாய்க்கிழமை மாலை 3 3.30 மணியளவில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, துர்கை அம்மனுக்கு அபிஷேகம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் காட்சியளித்தார்.
இந்த ராகு கால சிறப்பு வழிபாட்டில் ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம். இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.