ஈரோடு கறவை மாட்டுச்சந்தை: 875 மாடுகள், கன்றுகள் விற்பனை
ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டுச்சந்தையில் பசு, எருமை, கன்றுக்குட்டிகள் என மொத்தம் 875 கால்நடைகள் விற்பனை ஆகியுள்ளன.
ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டுச்சந்தையில் பசு, எருமை, கன்றுக்குட்டிகள் என மொத்தம் 875 கால்நடைகள் விற்பனை ஆகியுள்ளன.
ஈரோடு, கருங்கல்பாளையத்தில் காவிரிக் கரை சோதனைச்சாவடி அருகே வாரந்தோறும் புதன், வியாழன் ஆகிய இரு நாள்களில் மாட்டுச் சந்தை நடைபெறுகிறது.
அதில், புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவைப் பசுக்கள், எருமைகள், வளர்ப்பு கன்றுக்குட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய இச்சந்தைக்கு, ஈரோடு மட்டுமின்றி நாமக்கல், சேலம், திருப்பூர், திண்டுக்கல், கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இங்கு கொண்டுவரப்படும் மாடுகள் தரமானதாக உள்ள காரணத்தால் அவற்றை கொள்முதல் செய்ய கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும்
வருகின்றனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு அனைத்து மாநில வியாபாரிகளும், மாடுகள் வரத்தும் கணிசமாகவே இருந்தது. இதில், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநில வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர். ஆனால், உரிய விலை கிடைக்காத சூழ்நிலை உள்ளதால் மாடுகளை ஆர்வத்துடன் வாங்கவில்லை என வியாபாரிகள்
தெரிவித்தனர்.
இதுகுறித்து, மாட்டுச்சந்தை மேலாளர் ஆர்.முருகன் கூறியதாவது: தென் மாநிலங்களைச் சார்ந்த வியாபாரிகள் வழக்கம்போல வந்திருந்தனர். அத்துடன் விவசாயிகளும் சந்தைக்கு வந்திருந்தனர். இந்த வாரச் சந்தையில் 375 பசுக்கள், 300 எருமைகள், 200 வளர்ப்புக் கன்றுகள் விற்பனை செய்யப்பட்டன.
இதில், பசு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.34 ஆயிரம் வரையிலும், எருமை ரூ. 18 ஆயிரம் முதல் ரூ.36 ஆயிரம் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்பனையாகின. மொத்தம் சுமார் ரூ.3 கோடிக்கு வணிகம் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.