FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரயில் மோதி மூதாட்டி சாவு

கொடுமுடி அருகே ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

கொடுமுடி அருகே ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
 கொடுமுடி , தலைவன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி அன்னமாள் (80). இவர், ஞாயிற்றுக்கிழமை மாலை கொடுமுடி ரயில்வே நிலையத்தில் உள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த ரயில் அன்னமாள் மீது மோதியதில் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்தார்.
 சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு ரயில்வே காவல் துறையினர் உயிரிழந்த அன்னமாளின் உடலைக் கைப்பற்றி ஈரேடு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
 இச்சம்பவம் குறித்து, ஈரோடு ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments