FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரண நிதி அளிக்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 25 மே 2018, 12:50 am IST
பகிர்:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரண நிதி அளிக்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
ஈரோட்டில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் வியாழக்கிழமை அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பது, அவர்களின் குடும்பங்களுக்கு அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண உதவியாக அறிவித்துள்ளனர். இந்த தொகையை ரூ. 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அமைதியான முறையில் பேரணி நடத்திய மக்களை கொடூரமாகச் சுட்டுக் கொன்ற போலீஸாரை பணிநீக்கம் செய்வதுடன், சுட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
பொதுமக்களுக்கு புற்றுநோயை உண்டாக்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்டச் செயலாளர் மயிலதுரையன், நிர்வாகிகள் குணசேகரன், பூபதி, குமரேசன், லோகு, துரைசாமி, சக்திவேல், சத்யா, நித்யா, காஞ்சனா, தனக்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments