ஓடிடியில் அன்பே டயானா எப்போது?
அன்பே டயானா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
பாரி இளவழகன் எழுதி, இயக்கி, நடித்த அன்பே டயானா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் இரா எண்டர்டெயின்மென் தயாரிப்பில் பாரி இளவழகன் எழுதி, இயக்கி, நடித்த அன்பே டயானா திரைப்படம் கடந்த ஜூலை 17ஆம் தேதி வெளியானது.
மேலும் இந்தப் படத்தில் ரோஜா, சேத்தன், ரம்யா ரங்கநாதன், பரிதாபங்கள் கோபி முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஆங்கிலோ இந்திய நாயகிக்கும் தென் தமிழக நாயகனுக்கும் நடைபெறும் கதையாக அன்பே டயானா உருவானது.
Advertisement
Advertisement
படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
சென்னை பெரம்பூரில் நடக்கும் கதையாக உருவான இதில், நாயகன் ஆங்கிலோ இந்தியனான நாயகியைக் காதலிக்கும் கதையாக இது உருவாகியிருந்தது.
இந்தப் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. நகைச்சுவைக் காட்சிகளும் மக்களை கவர்ந்துள்ளது.
இந்த நிலையில், அன்பே டயானா திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் ஆக. 14 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
Details regarding the OTT release of the film Anbe Diana written, directed by, and starring Pari Ilavazhagan have been revealed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.