பாரி இளவழகனின் அன்பே டயானா ஓடிடி தேதி!
அன்பே டயானா ஓடிடி தேதி...
அன்பே டயானா திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மில்லியன் டாலர் பிக்சர்ஸ் மற்றும் இரா எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பாரி இளவழகன் எழுதி, இயக்கி, நடித்த அன்பே டயானா திரைப்படம் கடந்த ஜூலை 17ஆம் தேதி வெளியானது.
சென்னை பெரம்பூரில் நடக்கும் கதையாக உருவான இதில், நாயகன் ஆங்கிலோ இந்தியனான நாயகியைக் காதலிக்கும் கதையாக இது உருவாகியிருந்தது. காதல், குடும்பம் என நகைச்சுவை படமான வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஆனால், எதிர்பார்த்த வணிக வெற்றியைப் பெறவில்லை. காரணம், இப்படம் வெளியாகி ஒரு வாரத்தில் ஜன நாயகனும் வெளியானது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அன்பே டயானா திரைப்படம் வருகிற ஆக. 8 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரோஜா, சேத்தன், ரம்யா ரங்கநாதன், பரிதாபங்கள் கோபி முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The OTT release date for the movie Anbe Diana has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.