பசுமை வீடு திட்டத்தின்கீழ் தரமில்லாத கம்பிகள் வழங்குவதாக குற்றச்சாட்டு
தாளவாடியில் பசுமை வீடு கட்டும் திட்டத்தின்கீழ், பஞ்சாயத்து சார்பில் வீடுகள் கட்ட துருப்பிடித்த தரமில்லாத கம்பிகள் வழங்குவதாக பயனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தாளவாடியில் பசுமை வீடு கட்டும் திட்டத்தின்கீழ், பஞ்சாயத்து சார்பில் வீடுகள் கட்ட துருப்பிடித்த தரமில்லாத கம்பிகள் வழங்குவதாக பயனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வட்டத்தில் பி.எம்.ஒய்.ஏ. திட்டத்தின்கீழ் அரசு சார்பில் பசுமை வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடு இல்லாத பயனாளிகளுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இத்திட்டத்தின்கீழ் பஞ்சாயத்து சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு வீடு கட்டுவதற்குத் தேவையான சிமென்ட், கான்கிரீட் கம்பிகள் வட்டார வளர்ச்சித் துறை மூலம் வழங்கப்படுகிறது. ஆனால், கான்கிரீட் கம்பிகள் பல மாதங்களாக அலுவலகம் முன்பு போடப்பட்டு துருப்பிடித்து சேதமடைந்துள்ளது. அதனையே பயனாளிகளுக்கு வழங்குகின்றனர். பயனாளிகள் இந்த தரமில்லாத கம்பியை வாங்க மறுப்பதோடு, இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதில் தெரிவிப்பதில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
கம்பிகளை இருப்பு வைப்பதற்கென்று அறைகள் இருந்தும், அதனை அங்கு வைக்காமல் அலுவலகம் முன்பு குப்பை போல குவித்து வைப்பதால் வெயில், மழையில் நனைந்து துருப்பிடித்து வீணாகி வருகிறது. இதுகுறித்து, மாவட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.