மதுவிலக்குப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று ஏலம்
மதுவிலக்கு தொடர்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வெள்ளிக்கிழமை ஏலம் விடப்படுகிறது.
மதுவிலக்கு தொடர்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வெள்ளிக்கிழமை ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட தகவல்:
ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்டுள்ள 2 நான்கு சக்கர வாகனங்கள், 14 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 16 வாகனங்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 7) காலை 10 மணியளவில் ஈரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.
வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் இருசக்கர வாகனத்துக்கு ரூ. 1,000, 4 சக்கர வாகனத்துக்கு ரூ. 2 ஆயிரமும் ஏலம் விடும் நாளன்று காலை 9 முதல் 10 மணிக்குள் ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் முன் பணம் செலுத்த வேண்டும். முன் பணத் தொகை செலுத்தும் நபர் மட்டும் ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத் தொகை, சரக்கு, சேவை வரி முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தை நேரிலும் அல்லது 0424-2268087 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.