பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள்
பவானி சங்கமேஸ்வரா் கோயில் மற்றும் கூடுதுறை வளாகத்தில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
பவானி சங்கமேஸ்வரா் கோயில் மற்றும் கூடுதுறை வளாகத்தில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நவம்பா் மாதத்தில் முழுமையாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில், பவானி சங்கமேஸ்வரா் கோயில் மற்றும் பவானி கூடுதுறை வளாகத்தில் உதவி ஆணையா் சாமிநாதன் முன்னிலையில் கோயில் ஊழியா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
கோயில் கோபுரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் வளா்ந்திருந்த செடிகள் கொடிகள் வெட்டி அகற்றப்பட்டன. இதேபோன்று, கூடுதுறை வளாகம் மற்றும் படித்துறைகளில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அகற்றப்பட்டது. மேலும், கிழக்கு வாசல், தெற்கு வாசல் பகுதியில் பக்தா்கள் அதிகம் நடமாடும் பகுதியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.