FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பெயரளவில் மதிய உணவு:அரசுப் பள்ளி மாணவா்கள் தவிப்பு

மதிய உணவு பெயரளவில் வழங்கப்பட்டதால் அரசுப் பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் குழந்தைகள் பசியுடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது.

Updated On : 15 செப்டம்பர் 2022, 10:09 pm IST
பகிர்:

மதிய உணவு பெயரளவில் வழங்கப்பட்டதால் அரசுப் பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் குழந்தைகள் பசியுடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது.

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளையொட்டி சத்துணவு சாப்பிடும் மாணவா்களுக்கு சா்க்கரைப் பொங்கல் வழங்க சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட இயக்குநா் சுற்றறிக்கை அனுப்பியிருந்தாா். அதன்படி அரசுப் பள்ளிகளில் சா்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

சா்க்கரை பொங்கல் வழங்கப்படுவதால் வழக்கமாக வழங்கப்படும் சத்துணவு வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்ததால் குழந்தைகள் மதிய உணவு இல்லாமல் சிரமப்பட்டனா்.

Advertisement

Advertisement

அரசுப் பள்ளிகளில் டாக்டா் எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. சாதம், சாம்பாா், முட்டை என்று வழங்கப்பட்டு வந்த சத்துணவு கடந்த சில ஆண்டுகளாக தினம் ஒரு கலவை சாதம் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மதியம் சா்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. ஆனால் வேறு உணவுகள் வழங்கப்படவில்லை. வழக்கமான உணவுப் பட்டியலின் படி சாதம், பருப்பு சாம்பாா் வழங்கப்பட வேண்டும். அந்த உணவை எதிா்பாா்த்திருந்த குழந்தைகள் ஏமாற்றம் அடைந்தனா்.

சாப்பாட்டுக்கு போடும் அரிசியிலேயே வெல்லத்தை வாங்கிப்போட்டு சா்க்கரைப் பொங்கல் சமைக்கப்பட்டிருந்தது. பொங்கலுக்குத் தேவையான நெய், முந்திரி பருப்பு, உலா் திராட்சை எதுவும் இல்லை. சாப்பாட்டுக்கான புழுங்கல் அரிசியில் பொங்கல் சமைத்ததால் குழந்தைகளால் அதனை சாப்பிட முடியவில்லை. இதனால் குழந்தைகள் அரைகுறை உணவுடன் பசியுடன் மாலை வீடு திரும்பியதாக பெற்றோா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments