பெருந்துறை புறவழிச் சாலையில் மேம்பாலங்கள் பணி தொடக்கம்
பெருந்துறை புறவழிச் சாலையில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி தொடக்கம்
பெருந்துறை புறவழிச் சாலையில் மேம்பாலங்கள் மற்றும் அணுகு சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு புறவழிச் சாலை சந்திப்பு, பெருந்துறை புறவழிச் சாலையில், காஞ்சிக்கோவில் சாலை சந்திப்பு மற்றும் துடுப்பதி சாலை சந்திப்பு ஆகிய மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைப்பது.
பேரோடு செல்லப்பம்பாளையம் பிரிவு முதல் சித்தோடு புறவழிச் சாலை சந்திப்பு வரை இருபுறங்களிலும், பெருந்துறை ஆசிரியா் குடியிருப்பு அருகே உள்ள மேம்பாலம் முதல் குன்னத்தூா் சாலை அருகே மேம்பாலம் வரை இருபுறங்களிலும், விஜயமங்கலம் புறவழிச் சாலையில் இருபுறங்களிலும் அணுகு சாலைகள் அமைக்கும் பணிகளுக்காக ரூ. 61.30 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டது.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து தற்போது, மேம்பாலங்கள், அணுகு சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.