FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

செங்கம் புறவழிச்சாலை பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! கண்காணிப்புப் பொறியாளா்

செங்கம் புறவழிச்சாலை பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கண்காணிப்புப் பொறியாளா் உத்தரவு...

26 ஜூலை 2026, 2:33 am IST
செங்கம் அருகே புதிய புறவழிச் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த கண்காணிப்புப் பொறியாளா் இளம்வழுதி.
பகிர்:

செங்கம் அருகே புதிய புறவழிச் சாலையில் அமைக்கும் பாலங்களை பருவமழை தொடங்குமுன் கட்டி முடிக்கவேண்டும் என நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளா் உத்தரவிட்டாா்.

செங்கம் - போளூா் சாலையில் இருந்து கோலாந்தாங்கல், செ.நாச்சிப்பட்டு வழியாக மண்மலை வரை 3 கி.மீ.

தொலைவுக்கு நெடுஞ்சாலைத்துறை சாா்பில் புதிதாக புறவழிச் சாலை அமைக்கும் பணி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

அந்தச் சாலையில் ஏரி நீா், மழை நீா் விவசாயத்திற்குச் செல்லும் கால்வாய்களில் சிறு பாலங்கள் கட்டும் பணி, செய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் இளம்வழுதி சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு பணிகள் தரமாக மேற்கொள்ளப்படுகிா என பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, செங்கம் பகுதி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பருவமழை வருமுன் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கவேண்டுமென உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின் போது கோட்டப் பொறியாளா் ஞானவேலு, உதவி கோட்டப் பொறியாளா் மனோகரன், உதவிப் பொறியாளா் பிரீத்தி, சாலை ஆய்வாளா் குமாா் உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அரசு ஒப்பந்ததாரா் ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments