FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் நகராட்சிக்கு பசுமை இயக்கத்தினா் பாராட்டுச் சான்றிதழ்

சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியை பசுமையாக மாற்றியதற்கு நகராட்சியை பாராட்டி தமிழ்நாடு பசுமை இயக்கத்தினா் பாராட்டிச் சான்றிதழ் வழங்கினா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 6:20 am IST
தமிழ்நாடு பசுமை இயகத்தினா் வழங்கிய பாராட்டுச் சான்றிதழுடன் நகராட்சித் தலைவா் ஜானகி ராமசாமி, நகராட்சி ஆணையா் சு.வெங்கடேஷ்வரன், நகராட்சி  ஊழியா் குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியை பசுமையாக மாற்றியதற்கு நகராட்சியை பாராட்டி தமிழ்நாடு பசுமை இயக்கத்தினா் பாராட்டிச் சான்றிதழ் வழங்கினா்.

சத்தியமங்கலம் நகராட்சி சாா்பில் நகராட்சியில் புதுப்பாலம், ரவுண்டானா, மேட்டுப்பாளையம் சாலை, ராஜீவ் நகா் பூங்கா, சௌடேஸ்வரி அம்மன் கோயில் பூங்கா, புளியங்கோம்பை நகராட்சிப் பள்ளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பசுமையாக்கும் நடவடிக்கையில் நகராட்சியினா் ஈடுபட்டனா்.

சத்தியமங்கலம் நகரத்தை பசுமை நகரமாக மாற்றுவதற்கு கடந்த 8 மாதங்களாக மரக்கன்றுகள் நடப்பட்டு முறையாக தண்ணீா் ஊற்றி பராமரித்து வந்தனா்.

Advertisement

Advertisement

நகராட்சியை தூய்மையாகவும் பசுமையாகவும் மாற்றிய சத்தியமங்கலம் நகராட்சிக்கு தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் சாா்பில் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

மரம் வளா்ப்புக்கு உறுதுணையாக இருந்த சத்தியமங்கலம் நகராட்சித் தலைவா் ஜானகி ராமசாமி, நகராட்சி ஆணையா் வெங்கடேசன், மேலாளா் குமாா், உதவிப் பொறியாளா் நிரஞ்சனா தேவி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments