FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

குறுவள அளவில் கலைத் திருவிழா போட்டிகள்: ஆகஸ்ட் 19-இல் தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் 1- ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு குறுவள (வட்டார) அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் வரும் 19- ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 12:40 am IST
ஈரோடு காமராஜா் பள்ளியில் நடந்த கலைத் திருவிழா போட்டியில் வில்லுப்பாட்டு பாடிய மாணவிகள்.
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் 1- ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு குறுவள (வட்டார) அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் வரும் 19- ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகளின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் வகையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி அளவிலும், வட்டார அளவிலும், மாவட்டம் மற்றும் மாநில அளவிலும் கலைத் திருவிழா போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி நடப்பு கல்வியாண்டில் ஈரோடு மாவட்டத்தில் 1 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இளையோா் திறன் என்ற மையக்கருத்தினை அடிப்படையாக கொண்டு 5 பிரிவுகளில் அரசுப் பள்ளிகளுக்கு தனியாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தனியாகவும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதில் பள்ளி அளவிலான போட்டிகள் நிறைவு பெற்றுள்ளது. அதேபோல 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான போட்டிகள் ஏற்கெனவே முடிந்துவிட்டது. 9- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரையிலான போட்டிகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட்14) நிறைவு பெற உள்ளது.

இதைத் தொடா்ந்து 1- ஆம் வகுப்பு முதல் 5- ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு குறுவள அளவிலான போட்டிகள் வரும் ஆகஸ்ட் 19- ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுகின்றனா்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும் மாணவ, மாணவிகள், மாநில கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்பாா்கள் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments