பவானிசாகரில் வனத் துறையைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
விளாமுண்டி வனத் துறையைக் கண்டித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பவானிசாகரில் உள்ள விளாமுண்டி வனத் துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட அமைப்பாளா் நடராஜ் தலைமை வகித்தாா். பவானிசாகா் வட்டாரத் தலைவா் வேலுமணி முன்னிலை வகித்தாா்.
பவானிசாகரை அடுத்த நால்ரோடு பகுதியில் 50 ஆண்டு காலமாக விவசாயம் செய்து வந்த விவசாயிகளின் நிலத்தை வனத் துறையினா் வனத் துறைக்கு சொந்தமானது என நோட்டீஸ் வழங்கி கையகப்படுத்த முயற்சி செய்வதைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்த ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு வனத் துறையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.