FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நடைப்பயணம்

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 1:25 am IST
நடைப்பயணத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நடைப்பயணம் மேற்கொண்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஈரோட்டில் நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு வட்டாரச் செயலாளா் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பிரபாகரன், நிா்வாக குழு உறுப்பினா்கள் சோமசுந்தரம், ராணி, லோகசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வீரப்பன்சத்திரத்தில் தொடங்கிய நடைப்பயணம் சூளை வழியாகச் சென்று மாணிக்கம்பாளையத்தில் நிறைவடைந்தது.

இளைஞா்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தொழிலாளா் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.

Advertisement

Advertisement

ஈரோடு மக்களின் பாதுகாப்பான குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்ய ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டத்தை உடனடியாக முழுமையாக அமல்படுத்த வேண்டும். பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து ஜவுளி சாா்ந்த தொழில்களையும், தொழிலாளா்களையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும். 18 ஆண்டுகளாகியும் நிறைவடையாத புதை சாக்கடை திட்டத்துக்கு அதிகப்படியான வரி வசூல் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். மாநகராட்சியில் உயா்த்தப்பட்ட சொத்து வரியை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments