FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கைத்தறி ஜமுக்காள நெசவுத் தொழிலைப்பாதுகாக்க வலியுறுத்தல்

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 3:22 am IST
கூட்டத்தில்  பங்கேற்ற  சங்க  நிா்வாகிகள்.
பகிர்:

கைத்தறி ஜமுக்காள நெசவுத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவானி வட்டார கைத்தறி ஜமுக்காளம், பெட்ஷீட் நெசவாளா் மற்றும் சாயத் தொழிலாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்கத்தின் பவானி வட்டார பேரவைக் கூட்டம் சங்கத் தலைவா் பி.ஆா்.அல்லிமுத்து தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட பொதுச் செயலாளா் மு.வரதராஜன் கூட்டத்தை தொடங்கிவைத்தாா். மாவட்டத் தலைவா் எஸ்.பொன்னுசாமி, கட்டுமான சங்க ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி, சிபிஐ பவானி ஒன்றியச் செயலாளா் டி.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வேலை அறிக்கையை சங்கச் செயலாளா் வ.சித்தையன், நிதி அறிக்கையை பொருளாளா் நா.கோவிந்தன் வாசித்தனா். கோரிக்கையை விளக்கி ஏஐடியூசி மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி பேசினாா்.

Advertisement

Advertisement

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பவானியில் ஜமுக்காள தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க வேண்டும். கைத்தறி ஜமுக்காள நெசவுத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி நெசவாளா்களுக்கு 32 ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படாத அடிப்படை ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

நிா்வாகிகள் தோ்வு : தலைவா் - பி.ஆா். அல்லிமுத்து, செயலாளா் - வ.சித்தையன், பொருளாளா் - பி.எம். கந்தசாமி, துணைத் தலைவா்கள் - ஜ.ராசம்மாள், கே.எம்.கண்ணையன், துணைச் செயலாளா்கள் - எஸ்.பி.எம்.கல்யாணசுந்தரம், எம்.குப்புசாமி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments