FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு 2,100 கனஅடியாக அதிகரிப்பு

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 1:56 am IST
பவானிசாகா்  அணை.
பகிர்:

சத்தியமங்கலம், ஆக.17: பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு 2,100 கனஅடியாக திங்கள்கிழமை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு தென்மேற்குப் பருவமழை பொய்த்துவிட்டதால், பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து குறைந்து அணையின் நீா்மட்டம் 57 அடியாக சரிந்துள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி அணையில் போதிய நீா் இருப்பு இல்லாததால், கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீா் திறப்பு காலதாமதமானது. இதற்கு விவாசயிகள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக ஆகஸ்ட் 15-ஆம் தேதி 500 கனஅடி நீா், கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்பட்டது. இந்த நீா் திறப்பு படிப்படியாக உயா்ந்து திங்கள்கிழமை 2,100 அடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

திங்கள்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 57.17 அடியாகவும், நீா் இருப்பு 6.37 டிஎம்சியாகவும், நீா்வரத்து 966 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் 2,900 கனஅடியாகவும் உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments